புங்குடு தீவு மாணவியான வித்தியாவின் படுகொலையில் என்ன நடந்தது என்ற முழு விபரத்தையும் பொலிசார் அறிந்துவிட்டார்கள். துசாந் என்னும் இளைஞர் , வித்தியாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதனை வித்தியா ஏற்கவில்லை. இன் நிலையில் தான் ஏற்கனவே ஒரு வழக்கில் வித்தியாவின் தாயார் சாட்சி சொல்லி, 2 இளைஞர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்துள்ளார். அந்த 2 நபர்களையும் உதவிக்கு வைத்துக்கொண்டு, தனது மற்றைய நண்பரான சந்திரகாந்தனையும் வைத்தே வித்தியா பாடசாலை செல்லும் வழியில் அவரைக் கடத்தியுள்ளார்கள். நேற்று முன் தினம் புங்குடு தீவில் புதிதாக கைதுசெய்யப்பட்ட மேலும் ஒரு நபர் கொடுத்த வாக்குமூலம் தான் இவை. தான் கஞ்சாவை கடத்தும் நபர் எனவும். தான் கஞ்சாவை கடத்திவந்து துசாந் மற்றும் சந்திரகாந்தனுக்கு கொடுத்ததாகவும். இவ்விருவருமே வித்தியாவை கற்பழித்துக் கொன்றதாகவும்.
அதனை தான் நேரில் பார்த்ததாகவும் இன் நபர் கூறியுள்ளார். இதேவேளை வித்தியாவை கடத்த முன்னர் தண்ணியடிப் பார்டி ஒன்று நடந்ததாகவும். வித்தியாவை கடத்த இருப்பதை அறிந்தே சுவிஸ் குமார் இந்த பார்டிக்கு காசு செலவழித்ததாகவும் கஞ்சா கடத்தும் நபர் தெரிவித்துள்ளார். இவர்களில் பலருக்கு வித்தியா கடத்தப்பட உள்ள விடையம் நன்றாக தெரியும். மேலும் வெறியடிச்சு குதூகலித்து இறுதியில் வித்தியாவை கடத்தி கொடூரமாக கற்பழித்து கொலை செய்து இருக்கிறார்கள்.
கஞ்சா கடத்தும் நபர் தற்போது அப்பூருவராக மாறியுள்ளார். இதனால் குற்றத்தை மறைத்த நபர்களுக்கும். குறச்செயல் புரிந்த நபர்களுக்கும் மற்றும் குற்றம் புரிய உதவிய நபர்களுக்கும் விரைவில் தண்டனை கிடைக்க உள்ளது. வித்தியாவின் தாயார் ஒரு வழக்கில் சாட்சி சொல்லி இருந்தார். இதனால் 2 இளைஞர்கள் சிறைசெல்லவேண்டி ஏற்பட்டது. அன் நாள் தொடக்கமே பலர் வித்தியாவின் தாயை கடுமையாக எச்சரித்து வந்துள்ளார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.