கவர்ச்சியான ஆடை அணிய வேண்டுமா? சிரமத்திற்கு ஆளாகும் கனடிய பெண்கள்!

canada_dresscode_002கனடாவில் உணவு விடுதிகளில் பணியாற்றும் பெண்கள் தாங்கள் அணியும் கவர்ச்சியான ஆடைகளால் இக்கட்டான சூழ்நிலையை சந்திக்கிறோம் எனக்கூறியுள்ளனர்.
கனடாவில் உள்ள சில உணவு விடுதிகளில் பணியாற்றும் பெண்கள், உயரமான காலணி, இறுக்கமான பாவாடைகள், அதிகமான முக ஒப்பனைகள் என பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமாக இருப்பர்.

இதுபோன்ற ஆடைகளால் அப்பணிப்பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பணிப்பெண்கள் கூறியதாவது, இவ்வாறு கவர்ச்சியான ஆடைகளை அணியவேண்டும் என்ற கட்டாயத்திற்கு ஆளாகிறோம். இந்த ஆடை விடயம் பற்றி பேசினால் எங்களது பணி பறிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சம் உள்ளது என்று கூறியுள்ளனர்.

இந்த பிரச்சனை குறித்து உணவகத்துறை பெண்கள் பலமுறை கருத்து தெரிவித்துள்ளனர், ஆடைகள் கவர்ச்சியாக உள்ளது, இதனால் எங்கள் பணியினை சரியான முறையில் செய்வதற்கு தடையாக உள்ளது என்றும் பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படுகிறோம் எனவும் கூறியுள்ளனர்.

ஆனால், தற்போது வரை செவிசாய்க்கப்படவில்லை. கடந்த 2015 ஆம் ஆண்டு அல்பேர்ட்டா பல்கலைக்கழகம் சார்பில், உணவகங்களில் நடைபெறும் பாலியல் பிரச்சனைகள் குறித்து ஆவணப்படம் எடுத்ததில், ஆடைகளே பாலியல் பிரச்சனைகளுக்கு காரணம் என உணவகங்களில் பணியாற்றும் பெண்கள் தெரிவித்துள்ளனர்.

17 வயது பெண் ஒருவர் கூறுகையில், எனது உடலில் அதிகமான தோல் பகுதிகளை காட்டுவதற்கு நிர்பந்திக்கப்பட்டேன் எனக்கூறியுள்ளார்.

Allison Ferry என்ற பெண் 4 வருடங்களாக உணவகத்தில் பணியாற்றியுள்ளார், அங்கு இவர் அணிந்த உயரமான காலணியால் இடுப்பு வலி மற்றும் கால்வலி ஏற்பட்டுள்ளது, இதனால் அந்த ஆடைகளை அணி மறுத்த அவரை உணவகம் வேலையை விட்டு நீக்கி வீட்டுக்கு அனுப்பியுள்ளது.

இதுகுறித்து அப்பெண் கூறியதாவது, இது கேலிக்குரிய விடயமாகும், இது ஆடை நெறிமுறைகள் பெண்களுக்கு அழகாக விடயமல்ல என்று கூறியுள்ளார்.

கனடாவில் வேலை கிடைப்பதில் முதல் இடம் எங்கு என்றால், உணவங்களில் தான் என 21 சதவீத கனடியர்கள் தெரிவித்துள்ளனர்.

Previous articleமூன்று உணவுகள்…முக்கிய நன்மைகள்!
Next article” வேட்டை ஆரம்பம் ” இன்று முதல் கொழும்பில் விஷேட சோதனை