யாழில் தற்கொலை செய்தவரின் வீட்டுக்குள் நுழைந்த யுவதி திடீர் மரணம்

dathயாழில் 21 வயது யுவதிக்கு பேய் தாக்கியதா? தற்கொலை செய்தவரின் வீட்டுக்குள் நுழைந்த யுவதி திடீர் மரணம்

மயங்கி விழுந்து யுவதி ஒருவர் இன்று காலை மரணமாகியுள்ளார். இச் சம்பவம் யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

உறவினர் ஒருவர் கடந்த மாதம் தற்கொலை செய்து இறந்துள்ளார். அவரின் வீட்டிற்கு வருகை தந்த யுவதி திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக உறவினர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் யுவதி மயங்கியவுடன் மரணம் சம்பவித்ததாக வைத்திய பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மரணமானவர் மானிப்பாய் சங்குவேலி பகுதியை சேர்ந்த 21 வயதான ஜெ.அஜந்தா என்பவராவார்.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஇப்படியும் ஒரு அமைச்சரா….?? நடந்ததைப் பாருங்கள்
Next articleஇலங்கைக்கு சுற்றுலா வெளிநாட்டவர்கள் வரிசையில் இந்தியாவைப் பின்தள்ளியது சீனா!