இலங்கைக்கு சுற்றுலா வெளிநாட்டவர்கள் வரிசையில் இந்தியாவைப் பின்தள்ளியது சீனா!

5642843_orig_0இலங்கைக்கு சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ளும் வெளிநாட்டவர்கள் வரிசையில் இந்தியாவை பின்தள்ளி சீனா முதலிடத்தினை பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த பெப்ரவரி மாதம் 32,186 சீனப் பிரஜைகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 17.4 வீதத்தினால் அதிகரித்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 26,559 இந்தியர்கள் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளதாகவும் இது முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியை விட 33 வீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.கடந்த ஜனவரியில் 28,895 இந்தியர்களும், 26,083 சீனர்களும் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களின் அடிப்படையில், சீனப் பிரஜைகளே அதிகளவில் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். 57,269 சீனர்கள் இந்த ஆண்டு இலங்கைக்கு வந்துள்ளனர். இது 49 வீத அதிகரிப்பாகும். இதேதேவேளை, 55,454 இந்தியர்களும் இந்த ஆண்டு இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இது 29 வீத அதிகரிப்பாகும்.

Previous articleயாழில் தற்கொலை செய்தவரின் வீட்டுக்குள் நுழைந்த யுவதி திடீர் மரணம்
Next article9–ந்தேதி சூரிய கிரகணம்