9–ந்தேதி சூரிய கிரகணம்

201603052315214சூரிய கிரகணம் 9–ந்தேதி (புதன்கிழமை) காலை ஏற்படுகிறது. இந்தோனேசியாவின் சுமத்ரா, போர்னியோ, சுலவேசி மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் இதனை 100 சதவீதம் தெளிவாக பார்க்க முடியும்.

இந்திய நேரப்படி அன்று காலை 4.49 மணிக்கு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்தியாவில் பகுதி சூரிய கிரகணமாகத்தான் பார்க்க முடியும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சென்னையில் 9–ந்தேதி காலை 6.20 மணிக்கு சூரியன் உதயமாகும். காலை 6.22 மணிக்கு தொடங்கி, 6.48 மணியுடன் சூரிய கிரகணம் முடிகிறது. அதாவது 26 நிமிடம் மட்டுமே சூரிய கிரகணத்தை காண முடியும்.

இதேபோல் டெல்லி, கொல்கத்தா உள்பட நாட்டின் பல பகுதிகளிலும் சூரிய கிரகணத்தை காண முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Previous articleஇலங்கைக்கு சுற்றுலா வெளிநாட்டவர்கள் வரிசையில் இந்தியாவைப் பின்தள்ளியது சீனா!
Next articleதமிழ் கைதிகளின் போராட்டம் 12வது நாளாக தொடர்கிறது! சிகிச்சைகளையும் புறக்கணிக்க முடிவு