தமிழ் கைதிகளின் போராட்டம் 12வது நாளாக தொடர்கிறது! சிகிச்சைகளையும் புறக்கணிக்க முடிவு

c8c19583-367e-47c0-82d9-16e45073a61b114 தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ச்சியாக 12வது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அவர்களின் உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளன.
இந்நிலையில் மருத்துவ சிகிச்சைகளை முழுமையாக புறக்கணிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவித்தள்ளதாகவும் தமக்கான முடிவொன்று கிடைக்கும் வரையில் உண்ணாவிரதத்தை கைவிடப் போவதில்லையென உறவினர்கள் ஊடாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் தொடர்ந்தும் இவ்வாறு தமது குடும்ப அங்கத்தவர்கள் சிறைகளில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை அனுமதிக்க முடியாது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் உட்பட அனைத்து தரப்பினரும் உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு கண்ணீருடன் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Previous article9–ந்தேதி சூரிய கிரகணம்
Next articleசமஷ்டி ஆட்சி முறை இந்தியாவுக்குப் பொருந்தும்! இலங்கைக்கு பொருத்தமற்றது!- கோமின் தயாசிறி