ஆசிரியை வகுப்பில் இல்லாத நேரம் மாணவியைப் பதம் பார்த்த மாணவன்! யாழில் சம்பவம்

8c23b57540ce35214560f12deca77288வகுப்பில் ஆசிரியர் இல்லாத வேளை மாணவியொருவரின் கழுத்தை சக வகுப்பு மாணவன் நசித்து நெரித்தார் என்றும் அதனால் 16 வயது மாணவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் – தென்மராட்சி பிரதேசப் பாடசாலை ஒன்றில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது என்று கூறப்படுகின்றது.

எனினும் குறித்த சம்பவத்திற்கு காரணமான மாணவனுக்கு எதிராக பாடசாலை நிர்வாகத்தினரால் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று பெற்றோர்கள் தரப்பில் குற்றச்சாட்டப்படுகின்றது.வகுப்பாசிரியர் மற்றும் அதிபரிடம் முறையிட்ட போது, மாணவன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. சக மாணவர்கள் ஆசிரியர் வகுப்பிற்கு வராத வேளைகளில் தம்மைத் தகாத வார்த்தைகளால் ஏசுவதாக ஆசிரியை ஒருவரிடம் மாணவிகள் கூறியுள்ளனர்.

அதனையடுத்து ஆண் மாணவர்கள் ஒரு மாணவியின் கழுத்தை நசித்துள்ளனர் என்றும் அது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறப்படுகின்றது.ஏற்கனவே குறித்த மாணவன் அதிபர் மற்றும் இரு ஆசிரியர்களால் தாக்கப்பட்டவர் என்று கூறி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதே பாடசாலை மாணவி ஒருவர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் பெற்றோர்கள் கூறுகின்றனர்.

Previous articleசமஷ்டி ஆட்சி முறை இந்தியாவுக்குப் பொருந்தும்! இலங்கைக்கு பொருத்தமற்றது!- கோமின் தயாசிறி
Next articleநமாலின் அடுத்த ஜல்சா விவகாரம்- புட்டு புட்டு வைக்கிறார்கள்- ஏர் லங்கா பெண் ?