நமாலின் அடுத்த ஜல்சா விவகாரம்- புட்டு புட்டு வைக்கிறார்கள்- ஏர் லங்கா பெண் ?

ff52ed28a369c8d580b1924483127f10முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் போது ஸ்ரீலங்கன் விமான சேவை பணிப்பெண் ஒருவரை, ஜனாதிபதி செயலகத்தில் இணைத்துக் கொண்டு அவருக்கு பெருமளவு பணம் வழங்கப்பட்டமை அம்பலமாகியுள்ளது.

குறித்த பெண்ணுக்கு விமானப் பயணங்களின் போது வழங்கும் கொடுப்பனவுகளாக ஒன்றரை மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவையினால் இந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதாக பாரிய நிதி மோசடிகள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. விமான பணிப்பெண்களுக்கு விமான பணியில் ஈடுபட்டால் மாத்திரமே விமான பயண கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்ற வரையறை காணப்பட்ட போதும், அவருக்கு மூன்று வருடங்களுக்கு இவ்வாறு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவினால் வழங்கிய உத்தரவுக்கு அமைய, குறித்த பெண்ணுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அவருக்கு நூறு வீதமான கொடுப்பனவுகளை வழங்காமல் ஐம்பது வீதமான கொடுப்பனவுகளை மாத்திரம் வழங்குவதற்கு அப்போதை நிறைவேற்று அதிகாரி மனோஜ் குணவர்தன நடவடிக்கை மேற்கொண்டதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இந்த விமான பணிப்பெண் முக்கிய அரசியல்வாதி குடும்ப உறுப்பினரின் அவசியத்திற்கமையவே ஜனாதிபதி செயலகத்திற்கு இணைத்து கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன் குறித்த இளம் அரசியல்வாதியின் குடும்ப உறுப்பினருடன் விமான பணிப்பெண்ணுக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த காலங்களில் விமான பயணிப் பெண்ணொருவர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுடன் இணைத்து பேசப்பட்டதுடன், கொழும்பு ஊடகங்கள் பலவற்றில் செய்தி வெளியாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை, விமான பணி பெண்ணுக்கு வழங்கப்பட்ட பெருந்தொகை பணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஒன்றரை மில்லியன் ரூபா வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை நிதி குற்றப் புலனாய்பு பிரிவிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது வரையில் இந்த விசாரணைகள் பாரிய நிதி மோசடிகள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஆசிரியை வகுப்பில் இல்லாத நேரம் மாணவியைப் பதம் பார்த்த மாணவன்! யாழில் சம்பவம்
Next articleதமிழ் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்புத் தரப்பு அச்சுறுத்தல்