திரைப்பட சேனல்கள் மற்றும் அதிகமான நேரங்கள் வெளியில் செலவிடுவதற்கு அனுமதி தராவிட்டால் நாங்கள் சாப்பிடமாட்டோம் என கனடாவில் சிறைக்கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கனடாவில் உள்ள CPS சிறைச்சாலையில் நடைபெற்ற இந்த போராட்டம் குறித்து நீதி அமைச்சர் Saskatchewan’s கூறியதாவது, 16 கைதிகள் தங்களுக்கு வழங்கப்படும் வசதிகளை மறுசீராய்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.
கைதிகளின் கோரிக்கைகள்
கேபிள் தொலைக்காட்சிகளின் எண்ணிக்கையை 12-ல் இருந்து 60 ஆக அதிகரிக்க வேண்டும்.
அதிகமான திரைப்பட சேனல்கள் வேண்டும்.
நாங்கள் அதிகமான நேரங்கள் வெளியில் செலவிடுவதற்கு அனுமதி தர வேண்டும்.
எங்களுக்கு வழங்கப்படும் தொகையை அதிகரித்தால் மட்டுமே உணவகங்களில் எங்களால் பணியாற்ற முடியும்.
நாங்கள் கேட்கும் வசதிகளை செய்து தராவிட்டால் உணவருந்தமாட்டோம் எனக்கூறியுள்ளனர்.
தற்போது, இந்த போராட்டம் தொடர்பாக நீதித் துறை விசாரித்து வருகிறது.