இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலி போராளிகளை கொலை செய்தது யார்?

srilanka-killing-fields-newஇறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் உள்ளிட்ட குழுவினர் சரணடைந்தாக பெண்ணொருவர் சாட்சியம் அளித்துள்ளார்.

அந்தக் குழுவிலிருந்து சுமார் 150 பேரை சிறிலங்கா இராணுவத்தினர், பேரூந்தில் ஏற்றிச் சென்றதை தாம் கண்டதாக பெண் ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார்.

கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற காணாமற்போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்தார்.

பாதுகாப்புக் கருதி தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத பெண் ஒருவர், கோப்பாயில் நடந்த அமர்வின் போது, இறுதிப் போர் பற்றிய சாட்சியத்தை அளித்திருந்தார்.

“போரின் இறுதிக்கட்டத்தில் 2009 மே 16ஆம் திகதி நந்திக்கடல் வழியாக சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தோம். அங்கிருந்து நாம் புதுக்குடியிருப்பக்கு கொண்டு செல்லப்பட்டோம்.

நாம் நந்திக்கடலில் நின்ற போது நடேசன் மற்றும் ஏனையவர்கள் வெள்ளைக்கொடியுடன் முன்னே வந்தனர். அவர்கள் இராணுவத்தினரால் ஒரு பேருந்தில் ஏற்றிச் செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

விடுதலைப் புலிகளை முன்னே வருமாறு இராணுவத்தினர் கூறினர். சரணடைந்த விடுதலைப் புலிகள் தனியாக கொண்டு செல்லப்பட்டதால் எனது கணவர் சரணடைவதற்கு அஞ்சினார்.

ஆனால், சரணடைபவர்களை ஐந்து நிமிடங்கள் சோதனையிட்ட பின்னர் விடுவிப்போம் என்று இராணுவத்தினர் கூறினர். அப்போது எனது கணவரும், ஏனைய 35 பேரும் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர்.

அவர்கள் கைவிடப்பட்டிருந்த வீடு ஒன்றுக்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அதன் பின்னர் அவரைக் காணவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

Previous articleஅதிகமான திரைப்பட சேனல்கள் வேண்டும்: அடம்பிடிக்கும் கனடிய கைதிகள்!
Next articleமலேசிய விமானம் ஏலியன்களால் கடத்தப்பட்டதா?