மகிந்தவின் மெய்ப்பாதுகாவலர் தொடர்பில் பல குற்றச்சாட்டுக்கள்

koskantha_mahinda_002முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மெய்ப் பாதுகாவலர் தொடர்பில் பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

மகிந்தவின் மெய்ப்பாதுகாவலராக செயற்பட்ட மேஜர் நெவில் வன்னியரச்சி அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.வெளிநாட்டுப் பயணங்களின் போது தலா 1.5 மில்லியன் ரூபா பணம் பெற்றுக் கொண்டுள்ளதாகவும், அரசாங்க கட்டடங்கள் மூன்றினை அபகரித்துள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வீரகெட்டிய பிரதேசத்தில் குறித்த நபர் அமைத்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றினால் பிரதேசத்திற்கு வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கடந்தகாலங்களில் காவல்துறைத் திணைக்களத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து பதவி உயர்வுகள் மற்றும் இடமாற்றங்களிலும் இவர் தலையீடு செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Previous articleஜ.எஸ் தீவிரவாதிகளின் தாக்குதால்கள்…! இலங்கைப் பொருளாதாரத்தில் ஆபத்து
Next articleவங்காள விரிகுடா காத்தான்குடி கடற்கரையில் இறந்த நிலையில் கரையொதுங்கும் மீன்கள்