மட்டக்களப்பு மாவட்டத்தின் வங்காள விரிகுடா காத்தான்குடி கடற்கரையில் நேற்று 05-03-2016 சனிக்கிழமை அதிகாலையிலிருந்து இறந்த நிலையில் சிறிய ரக மீன்களும், உயிருடன் கடல் பாம்பு ஒன்றும் கரையொதுங்கி வருவதாக காத்தான்குடி பிரதேச மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இதில் சில கடல் வாழ் உயிரினங்களும் இறந்த நிலையில் கடற்கரை பகுதியில் கரையொதுங்கியுள்ளது.
இதேவேளை கடலில் இருந்து பல கழிவுப்பொருட்கள் தொடர்ந்து கரையொதுங்கி வருவதனால் காத்தான்குடி கடற்கரை பகுதி குப்பை மயமாக காட்சியளிக்கின்றது. இந்த காலநிலை தொடரும் பட்சத்தில் மீன்கள் அதிகமாக இறந்த நிலையில் கரையொதுங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்காள விரிகுடா காத்தான்குடி கடற்கரையில் கடந்த 26-10-2014 திகதி அன்று இறந்த நிலையில் சிறிய ரக மீன்கள் மற்றும் நண்டுகள் கரையொதுங்கியமை குறிப்பிடத்தக்கது.