இந்துக்கள் நாளை அனுஷ்டிக்கவிருக்கும் மகா சிவராத்திரியினை முன்னிட்டு பம்பலப்பிட்டி லோரண்ஸ் வீதியில் அமைந்துள்ள சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெற்றுவரும் இந்தியாவின் வெவ்வேறு பிரதேசங்களில் வழிபடும் 12 சிவ லிங்கங்களின் கண்காட்சியினை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (06) பிற்பகல் விஜயமொன்றை மேற்கொண்டார்.
சிவ பக்தர்களின் சமய நம்பிக்கை மற்றும் அதனோடு தொடர்புடைய கண்காட்சியினை பார்வையிட்ட ஜனாதிபதி சமய ஆசீவாதங்களையும் பெற்றுக்கொண்டார்.
பிரம்மகுமாரிகள் ராஜயோக தியான நிலையத்தினர் இக்கண்காட்சியினை ஏற்பாடு செய்துள்ளனர்.