கொழும்பின் முக்கிய இடத்தில் விரட்டி அடிக்கப்பட்ட காதல் ஜோடிகள்

lovesகொழும்பு சுதந்திர சதுக்க மண்டபத்தில் உட்கார்ந்திருந்த ஜோடி ஒன்றை வெளியேற்ற முற்பட்ட போது, பாதுகாப்பு ஊழியர்களுக்கும் அந்த ஜோடிக்கும் இடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கம் குறித்த காணொளி ஒன்று தற்சமயம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

அந்தக் காணொளியில், குறித்த ஜோடியை அங்கிருந்து வெளியேறுமாறும், இது கலாசார பிரதேசம் எனவும் பாதுகாப்பு ஊழியர்கள் கூறும் போது, அதற்கு பதிலளித்த அந்த ஜோடியில் உள்ள பெண், ‘நாங்கள் தப்பாக எதுவும் செய்யவில்லை. இது சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட மக்கள் வந்து செல்லும் இடம். இங்கு உட்காராமல் எங்கு உட்காருவது?’ என ஊழியர்களுடன் தர்க்கம் புரிவது பதிவாகியுள்ளது.

இது குறித்து, அந்த ஜோடியில் உள்ள ஆண் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருக்கும் தகவலானது கீழ்வருமாறு அமைந்துள்ளது.

‘நாங்கள் சுதந்திர சதுக்கத்தில் ஆறுதலாக உட்கார்ந்திருந்த போது, இந்த முட்டாள்கள் (பாதுகாப்பு ஊழியர்கள்) அருகே வந்து, ஆணும் பெண்ணும் பொது இடத்தில் இவ்வாறு உட்கார்ந்திருப்பது கலாசார பிறழ்வானது என கூறினார். அப்படியானால், நாங்கள் ஒரு குழந்தையுடன் தான் அங்கு சென்று உட்கார வேண்டும். காதலர்களும் ஜோடிகளும் அங்கே சென்று உட்காருங்கள். அந்த முட்டாள்கள் மீண்டும் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம்’.

குறித்த ஜோடி எந்தவொரு தவறான நடத்தையையும் அங்கு புரியவில்லை என தெரிவிக்கும் பாதுகாப்பு ஊழியர்கள், கலாசார திணைக்களத்தின் உத்தரவுப்படியே அங்கு எந்தவொரு ஜோடியையும் உட்கார அனுமதிப்பதில்லை என அவர்கள் கூறியுள்ளனர். இத்தடை தொடர்பில் திணைக்களத்திடம் தான் கேள்வி எழுப்ப வேண்டும் என்றார்கள்.

ஆனால், ‘இலங்கையில் பொது இடத்தில் ஜோடிகளில் ஆணும் பெண்ணும் தனியாகவா இருக்க வேண்டும்?’ என அப்பெண் எழுப்பிய கேள்விக்கு, சரியான பதில் ஒன்றை அப்பாதுகாப்பு ஊழியர்களால் தெரிவிக்க முடியாது போயுள்ளது. இக்காணொளி தொடர்பாக சமூக வலைத்தளங்களில், ஆதரவு மற்றும் எதிர்க்கருத்துக்கள் பதியப்பட்டு வருகின்றன.

Previous articleஅவுஸ்திரேலியா செல்ல முயற்சித்து இடையில் சிக்கியவார்கள்
Next articleநளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரில் மூவர் விடுதலை இன்றா….???