அந்நிய படைகள் வெளியேறும் வரையில் பேச்சுவார்த்தை கிடையாது: தலிபான் அறிவிப்பு

c54fbf4d-89e8-498c-81de-33d4332c7145_S_secvpfஆப்கானிஸ்தானில் இருந்து அந்நிய படைகள் வெளியேறும் வரையில் பேச்சுவார்த்தை கிடையாது என்று தலிபான் அறிவித்து உள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த 14 ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நீடித்து வருகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசுக்கு எதிராக தலிபான் தீவிரவாத இயக்கம் சண்டையிட்டு வருகிறது. ஆப்கானிஸ்தான் ராணுவப்படைகளை குறிவைத்து இதுவரையில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அரசு பேச்சுவார்த்தைக்கு முயற்சிசெய்தும் தோல்வியிலே முடிந்தது. அங்கு தலீபான் தீவிரவாதிகளுடன் அரசு நேரடி அமைதி பேச்சு நடத்த விரும்புகிறது. பாகிஸ்தான் இதற்கான ஏற்பாட்டை செய்து வருகிறது.

இந்த பேச்சுவார்த்தைக்கு ஆப்கானிஸ்தான் அரசுடன், சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய நாடுகளும் ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த வகையில் ஆப்கானிஸ்தான், சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய 4 நாடுகளின் பிரதிநிதிகள் கடந்த மாத இறுதியில் காபூலில் 4-வது முறையாக சந்தித்து, அமைதி பேச்சு நடத்துவது குறித்து விவாதித்தார்கள். ஆனால் ஆப்கானிஸ்தான் அரசுடன் நேரடியாக அமைதி பேச்சு நடத்த வர முடியாது என தலீபான் தீவிரவாதிகள் திட்டவட்டமாக அறிவித்து விட்டனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அந்நிய படைகள் அனைத்தும் விடைபெற்றுச்செல்ல வேண்டும் என்பது தலீபான் தீவிரவாதிகளின் முக்கிய நிபந்தனையாக உள்ளது.

இந்த நிபந்தனையை நிறைவேற்ற முடியாத நிலையில், அங்கு தலீபான் தீவிரவாதிகளுடன் ஆப்கானிஸ்தான் அரசு அமைதி பேச்சு நடத்த முடியாது என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான் தீவிரவாதிகள் இடையிலான பேச்சுவார்த்தையில் முன்நிபந்தனைக்கு ஏற்கனவே பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது

Previous articleநளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரில் மூவர் விடுதலை இன்றா….???
Next articleசம்பந்தனை சந்திக்கிறது அரசியலமைப்பு நிபுணர்குழு!