பொலிசார் பிடியில் எதிர்பாராமல் சிக்கிய கடத்தல்காரர்கள்: கனடாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம்

marjuna_002கனடா நாட்டில் பயிற்சியில் ஈடுப்பட்டிருந்த பொலிசாரிடம் கடத்தல் கும்பல் ஒன்று 5 லட்சம் டொலர் மதிப்புள்ள போதை பொருட்களுடன் பிடிப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய கொலம்பியாவில் உள்ள ஃபீல்ட் என்ற பகுதியில் நேற்று முன் தினம் பொலிசார் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.

அப்போது, வேகமாக வந்த கார் ஒன்று சாலை விதியை மீறி பொலிசாரை கடக்க முயன்றுள்ளது.

காரின் போக்கை கவனித்து சந்தேகம் அடைந்த பொலிசார், உடனடியாக காரை மடக்கி நிறுத்தியுள்ளனர்.

பின்னர், காரில் இருந்த இருவரையும் விசாரணை செய்துள்ளனர்.

ஆனால், பொலிசாரை எதிர்ப்பார்க்காத இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர்.

இதனால் பலத்த சந்தேகம் அடைந்த பொலிசார், இருவரையும் வெளியேற்றிவிட்டு காரில் சோதனை செய்துள்ளனர்.

அப்போது, காருக்குள் பாலிதீன் பைகளில் கட்டுக்கட்டாக போதை பொருட்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

போதை பொருட்களை பறிமுதல் செய்த இருவரிடம் விசாரணை செய்தபோது, 47 மற்றும் 24 வயதுடைய இருவரும் அல்பேர்ட்டா நகரை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

போதை பொருள் தடுப்பு பொலிசார் மூலம் ஆய்வு செய்ததில், நபர்கள் கடத்தி வந்த போதை பொருட்களின் தற்போதைய சந்தை விலை 5 லட்சம் டொலர் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இருவரையும் கைது செய்துள்ள பொலிசார், எதிர்வரும் மே 10ம் திகதி நீதிமன்றத்தில் கடத்தல்காரர்களை ஆஜர்ப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Previous articleமாவுச்சத்து குறைபாடா? “மரவள்ளிக்கிழங்கு தோசை” சாப்பிடுங்கள்!
Next articleஅரசியல் கைதிகளை விடுவியுங்கள் – இல்லை எங்கள் உயிரை மாய்த்துக் கொள்வோம்!