அரசியல் கைதிகளை விடுவியுங்கள் – இல்லை எங்கள் உயிரை மாய்த்துக் கொள்வோம்!

மிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டத்தற்கு ஆதரவு தெரிவித்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் இன்று (திங்கட்கிழமை) அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று நடைபெறுகின்றது.

மன்னார் பிரஜைகள் குழு மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட அமைப்பு ஆகியவற்றினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த இந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று காலை 7.00 மணியளவில் யாழ்பபாணம் முனியப்பர் கோயில் வளாகத்தில் ஆரம்பமாகியுள்ளது.

இந்த போராட்டத்தில், வட மாகாணசபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்கள், விடுதலை செய்யப்பட்ட அரசியல்கைதிகளின் குடும்பங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை விடுதலை செய்யுமாறு கோரி மெகசின் சிறைச்சாலையிலுள்ள 14 தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ச்சியாக 15ஆவது நாளாக இன்றும் (திங்கட்கிழமை) உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும், கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பில் அரசாங்கம், தமிழ் அரசியல் தலைமைகள் என எவரும் கவனத்தில் எடுக்கவில்லை என அரசியல் கைதிகளின் உறவினர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

தற்போதைய நிலையில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உடல்நிலை மோசமடைந்து வருவதுடன், பலர் சிறைச்சாலை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மஹிந்த கெட்டவன், மைத்திரி நல்லவன் என்று வாக்களித்தோமே, மைத்திரியும் எங்களுக்கு எமன் என போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கைதி ஒருவரின் தாயார் கதறி அழுதார்.

அத்துடன், தமிழ் மக்களாக பிறந்ததற்காகவா? இந்த அரசாங்கம் இவ்வாறு நடந்துகொள்கின்றது என்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கேள்வி எழுப்பினர்.

இதன்போது, ‘மைத்திரி அரசே அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்!, மைத்திரி ரணிலே!-நல்லாட்சி வேடமிட்டு உலகை ஏமாற்றாதீர்கள்!, எமது உறவுகளை சிறையில் சாகடிக்காதீர்கள்’ என்ற வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின்போது, பல தாய்மார்கள் கண்ணீர் சிந்தி உணர்ச்சிவசப்பட்டவர்களாக அமர்ந்திருந்தனர். ‘தமது பிள்ளைகளை சாகடிப்பதற்கு முன்னர் தாய்மார் தங்களை சாகடிக்குமாறும், பெற்றவளுக்கு தான் தெரியும் பிள்ளையின் வலி’ என்றும் கூறி அழுது புலம்பினர்.

தமது பிள்ளைகளை விடுதலை செய்ய தவறின் தாமும் தொடர்ந்து இதுபோன்ற போராட்டங்களை நடாத்தி உயிரை மாய்த்துக் கொள்வோம் என்றும் கைதிகளின் உறவுகள் எச்சரித்தனர்.Jaffna-Fasting-Protest-01Jaffna-Fasting-Protest-02Jaffna-Fasting-Protest-03Jaffna-Fasting-Protest-04Jaffna-Fasting-Protest-05Jaffna-Fasting-Protest-07Jaffna-Fasting-Protest-08Jaffna-Fasting-Protest-09

Previous articleபொலிசார் பிடியில் எதிர்பாராமல் சிக்கிய கடத்தல்காரர்கள்: கனடாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம்
Next articleகொழும்பு பகுதிகளில் CID, STF உள்ளிட்ட பத்து விஷேட பாதுகாப்பு பிரிவினர் களத்தில் !