5 நாட்களுக்கு மின்வெட்டு

Eveningஇலங்கை மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் காரணமாக நாளை முதல் 5 நாட்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட மின் பொறியியலாளர் பணிமனை தெரிவித்துள்ளது.

காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையான காலப்பகுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ள பிரதேசங்கள் பற்றிய விபரங்கள் வருமாறு,

8ஆம் திகதி – மணல்பிட்டி, கொக்கட்டிச்சோலை, பட்டிப்பளை, அம்பிலாந்துறை, தாந்தாமலை பகுதி,9ஆம் திகதி – மாவடிவேம்பு, வந்தாறுமுலை, சித்தாண்டி, முறக்கொட்டஞ்சேனை, சந்திவெளி,10ஆம் திகதி – ஆரயம்பதி, ராசதரை கிராமம், ஆரயம்பதி பிரதான வீதி, காங்கேயனோடை, செல்வநகர் பகுதி,11ஆம் திகதி – பூலக்காடு பகுதிகள்,12ஆம் திகதி – களுவாஞ்சிக்குடி, பட்டிருப்பு பகுதி

Previous articleகொழும்பு பகுதிகளில் CID, STF உள்ளிட்ட பத்து விஷேட பாதுகாப்பு பிரிவினர் களத்தில் !
Next articleமரணமடைந்த கலாபவன் மணியின் உடலில் விஷம்? அதிர்ச்சி தகவல்!