யாழ்.தெல்லிப்பளை யூனியன் கல்லூரிக்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலையே பலியாகியுள்ளனர்.
தெல்லிப்பளையில் திங்கட்கிழமை மதியம் பல்சர் ரக மோட்டார் சைக்கிளில் மிக வேகமாக வந்த இரு இளைஞர்களும் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மதிலுடன் மோதுண்டு விபத்துக்கு உள்ளானார்கள்.
விபத்து தொடர்பான விசாரணைகளை தெல்லிப்பளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றார்கள்.