அரபு நாடுகளின் தூதுவர்கள் யாழ். வருகை!

muslims_commissioners_அரபு நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் ஐவர் அடங்கிய குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளது.

இலங்கைக்கான பாலஸ்தீன தூதுவர் மொஹம்மட் ஜமிலா, சவுதிஅரேபிய தூதுவர் ஏ.கே.ஏ.அல்முல்லா, குவைத் தூதுவர் கலாப் எம்.எம்.புடையிர், ஓமன் மற்றும் எகிப்து நாட்டு தூதுவர்களான மலிக் அல்சிக்னி மற்றும் எச்.எம்.மொஹம்மட் அஸ்ரம் ஆகியோரே இவ்வாறு விஜயம் செய்திருந்தனர்.

நேற்று யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த இக்குழுவினர் யாழ்ப்பாணத்திலுள்ள ஜும்மா பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யாழ் முஸ்லிம் பிரதிநிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

இக்கலந்துரையாடலில் யாழ் மாவட்டத்திலிருந்து கடந்த காலங்களில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை மற்றும் தற்போது வரை மீள்குடியேறியுள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்பில் அக்குழுவினர் கேட்டறிந்ததுடன் வாழ்வாதார நிலமைகள் தொடர்பிலும் கலந்துரையாடினர்.

மேலும் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பில் கொழும்பிலுள்ள அரபு நாடுகளின் தூதரகத்தில் முறையிட முடியும் என்றும் இவ்வாறான சந்தர்ப்பங்களை வடக்கிலுள்ள முஸ்லிம்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு தூதுவர்கள் தெரிவித்தனர்.

Previous articleஅஜித் சாரால் தான் இப்படியெல்லாம் நடக்கின்றது- பேபி அனிகா பேட்டி
Next articleஐ.நா கூட்டத் தொடரில் உரையாற்றிய அனந்தி