ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் புதிய பொதுச்செயலர் யார்? – இன்று முடிவு

upfa1 (1)ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய நிறைவேற்றுக் குழுக் கூட்டம் இன்று கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவரான சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறும். இதில், கட்சியின் புதிய பொதுச்செயலர் தெரிவு இடம்பெறவுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலராக இருந்த, பேராசிரியர் விஸ்வ வர்ணபால அண்மையில் காலமானதையடுத்தே, புதிய பொதுச்செயலர் தெரிவு இன்று இடம்பெறவுள்ளது.

மைத்திரிபால சிறிசேன ஆதரவு அணியைச் சேர்ந்த ஒருவரே இந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleஐ.நா கூட்டத் தொடரில் உரையாற்றிய அனந்தி
Next articleமஹிந்த ராஜபக்ச என்னை 19 நிமிடங்கள் தகாத வார்த்தைகளால் திட்டினார் – சந்திரிகா