மனைவியை பேஸ்புக் மூலமாக விற்க முயன்றவர்: பொலிஸார் வலைவீச்சு

facebokasasகடன் தொல்லை அதிகரித்தமையால் மனைவியை ரூ.1 லட்சத்துக்கு விற்பதாக பேஸ்புக்கில் அவரது கணவர் செய்த விளம்பரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் அருகே கார்கோன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திலீப் மாலி (30).

இவர் சமீபத்தில் தனது பேஸ்புக் பதிவில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டார்.

அதில், ‘பலரிடம் வாங்கிய கடனை திருப்பி தர வேண்டியிருக்கிறது. அதனால், என் மனைவியை ரூ.1 லட்சத்துக்கு விற்பனை செய்ய உள்ளேன். யாருக்காவது விருப்பமிருந்தால், எனது கைப்பேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுங்கள்’ என இலக்கத்தை குறிப்பிட்டு இந்தியில் எழுதியிருந்தார்.

அத்துடன், தனது மனைவி மற்றும் மகளின் புகைப்படத்தையும் சேர்த்து வெளியிட்டிருந்தார். இதைப்பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த

விவரம், திலீப்பின் மனைவிக்கு, அவரது உறவினர்கள் மூலமாக நேற்று முன்தினம் தான் தெரிய வந்திருக்கிறது.

உடனடியாக அவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். பொலிஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான திலீப்பை தேடி வருகின்றனர்.

Previous articleஸ்டாலினிடம் கருணாநிதி நடத்திய கலகலப்பான நேர் காணல் !
Next articleமுன்று வயது மகளை துஷ்பிரயோகம் செய்த கொடூர தந்தை