முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர்களில் ஒருவரான யோஷித ராஜபக்ச மற்றும் ஏனைய நால்வர் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனுத் தொடர்பான இறுதி முடிவு, மார்ச் 14ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சீ.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பில், யோசித ராஜபக்ஸ கடந்த ஜனவரி மாதம் 30ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.
இதேவேளை, யோசித ராஜபக்ஸ உள்ளிட்ட நான்கு பேருக்கு, உயர் நீதிமன்றில் பிணை மனு தாக்கல் செய்திருந்த நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பிணை மனு இன்றைய தினம் பரிசீலனை செய்யப்பட்ட போது, குறித்த மனு தொடர்பில் எதிர்வரும் 14ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்தநிலையில், இன்று கொழும்பு உயர் நீதிமன்றிற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஸ, விமல் வீரவங்ச, ஜீ.எல்.பீரிஸ், மஹிந்தானந்த அலுத்கமகே, டளஸ் அலகபெரும மற்றும் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்டோர் பிரசன்னமாகியுள்ளனர்.