பிரபாகரனை மீட்க நோர்வே – அமெரிக்கா கூட்டு முயற்சி! அம்பலப்படுத்திய கோத்தபாய

Gotaஇலங்கையில் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பிரபாகரனை மீட்க சர்வதேச முயற்சிகள் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
2009ஆம் ஆண்டு இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி நாட்களின் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை மீட்க சர்வதேச நாடுகள் முயன்றுள்ளன என்று கூறப்படுகிறது. போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை மீட்பது போன்று விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை காப்பாற்ற நோர்வே மற்றும் அமெரிக்கா கூட்டு முயற்சியில் ஈடுபட்டது.

இதற்காக அமெரிக்க பசிபிக் கட்டளையின் உயர்குழு ஒன்று இலங்கை கடல் எல்லைக்கு விஜயம் செய்துள்ளது போன்ற தகவல் கூறப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ச சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, இலங்கைக்கான அமெரிக்க தூதர் ரோபர்ட் பிளேக் பாதுகாப்புத்துறையில் உள்ள தனது நண்பரை ஒரு நாள் மாலைப்பொழுதில் அழைத்து பேசியுள்ளார்.

அப்போது போர்த் தடை பகுதியில் உள்ள தமிழர்களை கப்பல் மூலம் மீட்பது தொடர்பான முயற்சிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

அப்போது அந்த நண்பர், விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் அப்பாவி பொதுமக்களுடன் கலந்து தப்பி சென்றால் எப்படி தடுப்பது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு பிளேக் , அந்த பணியை நமது வீரர்கள் பார்த்துகொள்ளுவர்கள் என்று தெரிவித்ததுடன் இது தொடர்பாக இந்தியாவிடம் பேசிக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து விவாதிக்க இலங்கைக்கான இந்திய தூதர் அலோக் பிரசாத்தையும் பிளேக் சந்தித்து பேசியுள்ளார்.

இந்த சர்வதேச முயற்சிகள் அறிந்ததும் ஜனாதிபதி ராஜபக்ச அதிர்ச்சியடைந்தார். பின்னர் தனது வெளியக அமைச்சர் ரோகித்தா பொகோலம்மாவை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

விக்கிலீஸ் அமைப்பு வெளியிட்ட தகவலில் படி பொகோலம்மாவை சந்தித்த பிளேக் பாதுகாப்பு பகுதியில் உள்ள தமிழர்களை மீட்பது தொடர்பான அமெரிக்காவின் யோசனைகளையும் யுத்தத்தை தற்காலிகமாக நிறுத்துவது தொடர்பாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒத்துக்கவில்லை என்றால் ஐக்கிய நாடுகள் சபையின் தூதர் மூலம் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் போரை நிறுத்தவேண்டி ராஜபக்சவுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதற்கிடையில் ஐ.நா.வின் விஜய் நம்பியார் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக இலங்கைக்கு சென்று அந்நாட்டு அரசுடன் பேச்சு நடத்தியுள்ளார். மேலும் பிரபாகரனை மீட்க முயன்றவர்களில் விஜய் நம்பியாரும் ஒருவர் என்று கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Previous articleயோசிதவுக்கு எதிரான மின்னஞ்சல் ஆதாரங்கள் வெளிநாட்டில் அழிப்பு
Next articleமகளிர் தினத்தில் சிறுமி ஒருவர் துஷ்பிரயோகம்! சந்தேக நபர் கைது!