மகளிர் தினத்தில் சிறுமி ஒருவர் துஷ்பிரயோகம்! சந்தேக நபர் கைது!

rafe-delli-indiaமன்னார் பெரிய கருஸல் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் இன்று துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரிய கருஸல் கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவரே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் அதே பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் எனவும், பெரிய கருஸல் கிராமத்தில் திருமணம் செய்து வாழ்ந்து வருவதாகவும் தெரியவருகின்றது.

சந்தேகநபரின் மனைவி வீட்டில் இல்லாத நிலையில், இந்த துஷ்பிரயோக சம்பவம் இடம்பெற்றுள்ளாக அந்த பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியிடம் மன்னார் பொலிஸ் நிலைய பெண்கள் மற்றும் சிறுவர் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிய வருகின்றது.

இதேவேளை சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்கக்கோரி மன்னார் மாவட்டத்தில் இன்று கறுப்புப்பட்டி போராட்டம் இடம்பெற்றுள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleபிரபாகரனை மீட்க நோர்வே – அமெரிக்கா கூட்டு முயற்சி! அம்பலப்படுத்திய கோத்தபாய
Next articleபோப் ஆண்டவரிடம் அபாரமாக கேள்வி கேட்டு அசத்திய கனேடிய சிறுவன்