சிறிலங்காவுக்கு புத்தாயிரம் ஆண்டு சவால் உதவி – அமெரிக்க குழு மைத்திரியை சந்திப்பு

ms-us-teamசிறிலங்காவுக்கு புத்தாயிரம் ஆண்டு சவால் (மிலேனியம் சவால்) திட்டத்தின் கீழ் மீண்டும் உதவியளிக்க அமெரிக்கா முன்வந்துள்ள நிலையில், இதுதொடர்பாக பேச்சுக்களை நடத்த உயர்மட்டக் குழுவொன்று கொழும்பு வந்துள்ளது.

இந்தக் குழுவினர் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் வறுமையை குறைத்தல் உள்ளிட்ட விடயங்களில் எவ்வாறு அமெரிக்கா உதவலாம் என்பது குறித்து இந்தக் குழுவினர் சிறிலங்கா அதிபருடன் கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பில் சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப்பும் கலந்து கொண்டிருந்தார்.

Previous articleபிரகீத் கடத்தல் – எல்லா ஆவணங்களையும் ஒப்படைக்க இராணுவத் தளபதிக்கு நீதிமன்றம் உத்தரவு
Next articleபிள்ளையான் உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு