சென்னையில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுவரொட்டிகள், விளம்பரப் பலகைகள் அகற்றம்

banner_003சென்னையில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுவரொட்டிகள், விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததையடுத்து, சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் விதிமுறைகள் பின்பற்றப்படுவதைக் கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள், சுவரொட்டிகள், சுவர் விளம்பரங்கள் ஆகியவற்றை அழிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மார்ச் 7ம் திகதி வரை அரசு கட்டடங்கள், சுவர்கள், பொது இடங்கள் ஆகியவற்றில் வைக்கப்பட்டிருந்த 9,223 சுவரொட்டிகள், பேனர்கள், விளம்பரத் தட்டிகள், சுவர்களில் வரையப்பட்டிருந்த அரசியல் கட்சி விளம்பரங்கள், சின்னங்கள் ஆகியவை அழிக்கப்பட்டுள்ளன.

தனியாருக்குச் சொந்தமான சுவர்களில் வரையப்பட்டிருந்த 4,169 விளம்பரப் பலகைகள், சுவரொட்டிகள் உள்ளிட்டவை நீக்கப்பட்டுள்ளன.

மேலும், தொடர்ந்து இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleபிள்ளையான் உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு
Next articleதெறி ஆடியோ ரைட்ஸ் யார் வாங்கியது? கசிந்த தகவல்