சுவிஸில் மதுவுக்கு அடிமையான மக்கள் வசிக்கும் மாகாணம் எது?: வெளியான ஆய்வு தகவல்கள்

swiss_peoplewine_002சுவிட்சர்லாந்து நாட்டில் மதுவுக்கு அடிமையாக அதிகளவில் மக்கள் உயிரிழக்க நேரிடும் மாகாணங்கள் பற்றிய புள்ளிவிபரங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் பேசல் நகரில் உள்ள Frederique Chammartin என்ற சுகாதார அமைப்பு ஒன்று மதுபோதைக்கு பலியாகும் நபர்களை பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது.

கடந்த 2008 முதல் 2012ம் ஆண்டு வரை உயிரிழந்த 60,000 நபர்களின் இறப்பு சான்றிதழ்களை இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டது.

இதன் மூலம், சுவிட்சர்லாந்து நாட்டில் இத்தாலி மொழி பேசும் மாகாணங்களில் வசிக்கும் மக்களே அதிகளவில் குடிபோதைக்கு அடிமையாகி உள்ளது தெரியவந்துள்ளது.

குறிப்பாக இத்தாலி மொழி பேசும் டிசினோ(Ticino)மாகாணத்தில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் சுமார் 20.8 சதவிகிதத்தினர் தினமும் மது குடிப்பதுடன் அதனால் கல்லீரல் பாதிக்கப்பட்டு உயிரிழப்புகளும் அதிகமாக ஏற்படுகிறது.

இரண்டாவதாக, பிரெஞ்ச் மொழி பேசும் மாகாணங்களில் 14.7 சதவிகித மக்களும், ஜேர்மன் மொழி பேசும் மாகாணங்களில் சுமார் 8.2 சதவிகித மக்களும் குடிபோதைக்கு அடிமையாகியுள்ளனர்.

இந்த ஆய்வு முடிவுகள் குறித்து Gerhard Gmel என்ற ஆய்வாளர் பேசியபோது, ‘ஒருவரின் கல்லீரல் பழுதாகிருது என்றால் அதற்கு மிக முக்கிய காரணம் மதுவாக தான் இருக்க முடியும்.

மேற்கு சுவிஸில் வசிப்பவர்கள் அதிகளவில் மதுபோதைக்கு அடிமையாகியுள்ளதால், பெரும்பாலானவர்கள் கல்லீரல் பாதிப்பு காரணமாகவே உயிரிழப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Previous articleதெறி ஆடியோ ரைட்ஸ் யார் வாங்கியது? கசிந்த தகவல்
Next articleயாழ்ப்பாணத்தில் போராடியவர்களை புகைப்படம் எடுத்த புலனாய்வாளர்கள்