கருணா தலை மறைவு? எங்கு தேடினாலும் இல்லையாம்…?

karunaமகிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருந்தவேளை , ஆட்டம் காட்டிய பலர் தற்போது எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியாது.

அந்த வகையில் சுதந்திரக் கட்சியின் உப தலைவர் , நாடாளுமன்ற உறுப்பினர் என்று ஒரு காலத்தில் படு பிசியாக அலைந்து திரிந்த கருணா தற்போது எந்த மூலையில் ஒளிந்து இருக்கிறார் என்றே தெரியாது என்கிறார்கள்.

வாயை மூடிக்கொண்டு வாலை சுருட்டிக்கொண்டு ஒரு இடத்தில் இருக்கா விட்டால் , விளைவுகள் பலமாக இருக்கும் என்று நேரடியாகவே எச்சரித்தார் கோட்டபாய. வழமையாக ஆட்சி மாறினால் புதிதாக ஆட்சிக்கு வந்த நபர்கள் தான் கருணாவை வெருட்டி இருக்க வேண்டும்.

ஆனால் இங்கே தலை கீழாக மாறி நடந்துள்ளது என்கிறார்கள்.

அதாவது ஆட்சியை இழந்து அனாதரவாக இருக்கும் கோட்டபாய ராஜபக்ஷ ஒரு முறை தொலைபேசியில் வெருட்டிய வெருட்டில் கருணா துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடி ஒளிந்துகொண்டதாக கொழும்பு வட்டாரங்களில் பரவலாக பேச்சு அடிபடுகிறது.

Previous articleஇணையத்தை கலக்கும் ஸ்ருதிஹாசன் வீடியோ
Next articleபுலிகளிடம் கைப்பற்றிய 40 கிலோ தங்கத்தைக் காணவில்லையாம்