சிவராத்திரியில் மதுபோதை: பொலிசிடம் சொன்னதால் கடைக்காரருக்கு வாள் வெட்டு !

f62e18e1b8dfe9df5f218e8f40bc0ddd (1)முல்லைத்தீவு ஓட்டுசுட்டான் பிரதேசத்தில் நேற்று இரவு இனம்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.இந்த சம்பவத்தில் மூன்றுபேர் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளதோடு நான்கு பேர் அடி காயங்களுக்குள்ளாகியுள்ளனர். இதனை கண்டித்து ஒட்டுசுட்டான் வர்த்தகசங்கம் கடையடைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் வாள்வெட்டுக்கு இலக்கான மூவரும் முல்லைத்தீவு மாவட்ட அரசினர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அறியமுடிகிறது

நேற்று முன்தினம் இரவு சிவராத்திரி தினத்தில் ஓட்டுசுட்டன் வர்த்தகநிலையத்தில் இனந்தெரியாத குழு கோயிலுக்கு முன்னாள் இருந்த கடையில் மதுபோதையில் வந்து தகராறு புரிந்துள்ளனர்.இந்த சம்பவத்தை தொடர்ந்து கடைமுதலாளியினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு குழுவினர் குறித்த கடையில் வாள் மற்றும் பொல்லுகளுடன் இறங்கி கடையில் நின்றவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

Previous articleகொழும்பு துறைமுகத்தில் மாபியா
Next articleதள்ளாடி இராணுவ முகாம் எதற்கு?