கவர்ச்சியான ஆடைகளை அணிய பெண்களை வற்புறுத்தக்கூடாது!

canada_dresscode_002கனடாவில் உணவகம் மற்றும் மதுபானக்கடைகளில் பணியாற்றும் பெண்களுக்கு ஆடைக்கட்டுப்பாடு விதிக்கக்கூடாது என மனித உரிமை ஆணையகம் தெரிவித்துள்ளது.
கனடாவில் உள்ள பெரும்பாலான இடங்களில் உணவகம் மற்றும் மதுபானக்கடைகளில் பணியாற்றும் பெண்கள் கவர்ச்சியான ஆடைகளை அணிவதற்கு நிர்பந்திக்கப்படுகின்றனர்.

உயரமான காலணிகள், குட்டைப்பாவடை, அளவுக்கதிகமான முக ஒப்பனை போன்ற ஆடைக்கட்டுப்பாட்டால், பாலியல் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது, அதுமட்டுமின்றி இதுபோன்ற கவர்ச்சியான ஆடைகளால், தங்களது பணிகளை கூட சரியான முறையில் பார்க்க முடியாத அளவுக்கு சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.

இந்நிலையில் பெண்கள் தினத்தை முன்னிட்டு, உணவகம் மற்றும் மதுபானக்கடைகளில் பணியாற்றும் பெண்களை கவர்ச்சியான ஆடைகளை அணிவதற்கு கட்டாயப்படுத்தக்கூடாது என ஒன்ராறியோ மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த ஆடைக்கட்டுப்பாடு தொடர்பாக வெளியான கொள்கையில், பணியாற்றும் இடங்களில் ஆண், பெண் இருபாலருக்கு சரிசமமான ஆடைக்கட்டுப்பாட்டினை விதிக்க வேண்டும்.

அப்படி உங்கள் கடைகளில் உள்ள ஊழியர்கள் பார்ப்பதற்கு நல்ல தோற்றத்தில் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், சீருடையை அமல்படுத்துங்கள்.

ஆனால், பெண்கள் கவர்ச்சியான ஆடைகள் தான் அணியவேண்டும் என எக்காரணம் கொண்டும் வற்புறுத்தக்கூடாது, பணியிடங்களில் பெண்களுக்கு மரியாதை அளிப்பது முக்கியமான ஒன்றாகும் எனக்கூறியுள்ளது.

Previous articleஎல்லாம் அஜித்தின் மேஜிக்- விவேக் புகழாரம்
Next articleதமிழக அகதி முகாமில் தற்கொலை செய்து கொண்ட ஈழ உறவின் நெஞ்சை பிழியும் காட்சி!