யாழில் ரயில் கடவையில் தற்கொலை முயற்சி: இளைஞரின் கை பறிபோனது

Matara_Railway_Stationயாழ்ப்பாணம் – கந்தர்மடச் சந்திக்கும் யாழ். இந்து மகளிர் கல்லூரிக்கும் இடைப்பட்ட பிரதேசத்தை ஊடறுத்துச் செல்லும் ரயில் கடவையில் இன்று (வியாழக்கிழமை) காலை தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரின் கை, முழங்கையுடன் துண்டாடப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து இன்று அதிகாலை யாழ்ப்பாணத்தை வந்தடைந்த இரவு தபால் ரயிலில் அகப்பட்டு, காயமடைந்த 19 வயதான யசுருதீன் சயீன் மொஹமட் என்ற இளைஞர் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில், ரயில் கடவையின் குறுக்காக படுத்திருந்த குறித்த இளைஞரை, அப்பகுதியால் சென்ற சிலர் காப்பாற்ற முற்பட்ட போது, ரயிலும் நெருங்கி வந்ததால், இளைஞரின் வலது கை துண்டாடப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணையை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

Previous articleபசில் ராஜபக்ச வெளிநாடு செல்லத் தடை
Next articleசட்டமும், ஒழுங்கும் எமது கட்டுப்பாட்டுக்குள் இல்லை