டி20 உலகக்கிண்ண பயிற்சிப்போட்டி: இந்தியா- மேற்கிந்திய தீவுகள், இலங்கை- நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்

pratice_match_001டி20 உலகக்கிண்ண பயிற்சிப் போட்டியில் கொல்கத்தாவில் இன்று நடைபெறும் ஒரு ஆட்டத்தில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுகின்றன.
இந்திய அணியை பொறுத்தவரை அவுஸ்திரேலிய தொடர், இலங்கை தொடர், ஆசியக்கிண்ணம் என்று அனைத்திலும் வெற்றி வாகை சூடி வலுவான நிலையில் உள்ளது.

இதனால் கண்டிப்பாக எதிரணிக்கு இந்தியா எப்போதும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

மேற்கிந்திய தீவுகள் அணியை பொறுத்தவரை பொல்லார்ட், டேரன் பிராவோ, நரைன் போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லாதது அந்த அணிக்கு பின்னடைவு தான்.

இருப்பினும் சிக்சர் மன்னன் கெய்ல், டுவைன் பிராவோ, அணித்தலைவர் சமி போன்ற அனுபவ வீரர்கள் அணியில் இருப்பது அந்த அணிக்கு நம்பிக்கை அளிக்கும்.

இந்திய நேரப்படி இந்தப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.

Previous articleபெற்ற மகளை மூன்று வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை
Next articleசிம்புவின் அச்சம் என்பது மடமையடா ஆடியோ வெளியீடு எப்போது?