தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உயிரிழப்பதற்கு முன்னதாகவே யுத்தம் முடிவடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆசனத்திலிருந்து எழும்பி சபையிலிருந்து வெளியேறினார்.
நிதியமைச்சின் கட்டளைகளை அங்கீகரித்தல் தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இறுதியுத்தத்தின்போது இடம்பெற்ற பல இரகசிய சம்பவங்கள் தொடர்பில் இரகசியங்களை போட்டுடைக்க ஆரம்பித்தார்.
புலிகளின் தலைவர் போரில் உயிரிழக்கும் முன்பே போர் முடிவடைந்துவிட்டதாக மஹிந்த ராஜபக்சவே அறிவித்திருந்தார். எனினும் அப்போது புலிகளின் தலைவர் உயிருடனேயே இருந்தார் என்று சரத் பொன்சேகா சபையில் பகிரங்கமாக தெரிவித்தார்.
இந்த சந்தர்ப்பத்திலேயே மஹிந்த ராஜபக்ச ஆசனத்திலிருந்து எழும்பி, சபையிலிருந்து வெளியேறினார்.