என் மனைவிக்கு கள்ளக்காதலன் இருக்கிறார்: கன்னட நடிகர் தர்ஷன் பரபர புகார்

10-1457603843-4தனது மனைவி விஜயலட்சுமிக்கு கள்ளக்காதலன் இருப்பதாக கன்னட நடிகர் தர்ஷன் தெரிவித்துள்ளார். கன்னட நடிகர் தர்ஷன் விஜயலட்சுமி என்பவரை 4 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் தர்ஷனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி பிரச்சனையாக உள்ளது. முன்னதாக கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தர்ஷன் தனது மனைவியை அடிக்க அவர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து தர்ஷன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பிரிவு இருவரும் பிரச்சனையை எல்லாம் மறந்து ஒன்று சேர்ந்தனர். இந்நிலையில் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டு அவர்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறார்கள்.

விஜயலட்சுமி விஜயலட்சுமி தனது மகனுடன் ஹோஸ்கெரேஹள்ளியில் வசிக்கிறார். தர்ஷன் ராஜராஜேஷ்வரிநகரில் தனியாக வசித்து வருகிறார்.

ரகளை தர்ஷன் புதன்கிழமை இரவு விஜயலட்சுமியின் வீ்ட்டிற்கு சென்று அவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும் வாட்ச்மேன் தேவராஜையும் அவர் தாக்கியுள்ளார். இதையடுத்து விஜயலட்சுமி போலீசில் புகார் அளித்தார்.

கள்ளக்காதலன் விஜயலட்சுமி புகார் அளித்துள்ள நிலையில் அவருக்கு கள்ளக்காதலன் இருப்பதாக தர்ஷன் குற்றம் சாட்டியுள்ளார்.

Previous articleபிரபாகரன் எப்போது இறந்தார்? சிவாஜிலிங்கம் கேள்வி!
Next articleராஜீவ் காந்தியைக் கொன்றது மிகப் பெரிய தவறு என பாலசிங்கம் ஒப்புக்கொண்டார்! சொல்ஹெய்ம்