தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இவர் நேற்று வியாழக்கிழமை இரவு இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கின்றார்.
இந்தியாவில் இன்றயை தினம் நடைபெறுகின்ற தலைவர்கள் மாநாடொன்றிற்காக சம்பந்தனுக்கு இந்திய அரசாங்கத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய அந்த மாநாட்டில் இரா. சம்பந்தன் கலந்துகொள்கின்றார்.