தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் அமெரிக்காவுக்கு வந்த கனெடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கனெடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே மூன்று நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
தனது மனைவி சோஃப்யா மற்றும் பிள்ளைகள் சேவியர், எல்லா கிரேஸ் மற்றும் ஹட்ரென் உடன் மேரிலாந்தில் வந்திறங்கிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கடந்த 19 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்காவுக்கு அரசு முறையாக விஜயம் செய்த பிரதமர், ட்ரூடே என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரூடேவின் 2 வயது மகன் ஹட்ரெனின் நடை, உடை மற்றூம் செய்கைகள் அங்கிருந்தவர்களை மிகவும் கவர்ந்தது.
அமெரிக்க பிரதமர் ஒபாமாவை இன்று சந்திக்கவுள்ள ட்ரூடே புவி வெப்பமயமாதல், எல்லை பிரச்சனை ஆகியவை குறித்து விவாதிக்கவுள்ளார்.
இது தொடர்பாக அமெரிக்கா வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளதாவது, சுற்றுச்சூழல் மாறுதல் தொடர்பான பிரச்சனையை தீர்க்க அமெரிக்கா மற்றும் கனடா இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளது.
மீத்தேன் வெளியேற்றத்தை குறைக்கவும் முடிவு செய்துள்ளன என்று தெரிவித்துள்ளது.