3 தமிழ் வீரர்களுடன் மலேசியா பயணமாகியது இலங்கை அணி!

1132016_06வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று தமிழ் வீரர்கள் உட்பட அனைத்து மாவட்ட வீரர்களையும் உள்ளடக்கிய இளையோர் இலங்கை அணி மலேசியாவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளது.

இவர்களுக்கான வழியனுப்புதல் நிகழ்வு இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் திலங்க சுமதிபால தலைமையில் இலங்கை கிரிக்கெட் சபையில் இடம்பெற்றது.

இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள தமிழ் வீரர்களுக்கு எமது ஆதரவினையும் உந்துசக்தியையும் வழங்கி அவர்களை தேசிய அணியில் இடம்பெறச் செய்வேண்டும். இந்நிலையில் ஏனைய வீரர்களும் குறிப்பாக தமிழ் வீரர்களும் பல சாதனைகள் புரிந்து எமது தாய்நாட்டை உயர்த்த வேண்டும். மலேசியாவில் 9 நாட்கள் இக்கிரிக்கெட் சுற்றுப்போட்டி இடம்பெறவுள்ளது.

இதில் 3 ஒருநாள் போட்டிகளும் 2 இருபதுக்கு – 20 போட்டிகளும் இடம்பெறவுள்ளன. அனைத்து மாவட்ட வீரர்களையும் உள்ளடக்கிய இளையோர் இலங்கை அணியில் பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரி மாணவன் கோபிநாத்தும் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மாணவனான ரிஷாந்த் ரியூட்டரும் மட்டக்களப்பு மெதடிஸ்ட் கல்லூரி மாணவனான ஜெயசூரியன் சஞ்சீவனும் இணைக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்களான சஜித் இந்திரரத்ன, ரமேஷ் நிமந்த, பந்துல உடுபிஹில ( அணித் தலைவர் ), உதித் மதுவன்த, டில்ஷான் சந்துருவன், சனுக்க, நிபுன் சதுரங்க, சண்டீப் நிஸன்சல, கஜித் கொட்டுவெகொட, நிவன்த கவிஷ்வர, இலங்கசிங்க, அத்தநாயக்க, அவிஷ்க பெர்னாண்டோ, சனோஜ் செனவிரத்ன ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Previous articleமக்களை ஈர்த்த கனெடிய பிரதமரின் 2 வயது மகன்
Next articleகத்தோலிக்க கிராமத்தில் எழும்பும் புத்தர் சிலைகள்