புலிகளுக்கு இலஞ்சம் வழங்கிய மஹிந்த ஆம்பலப் படுத்திய பொன்சேகா

Ltte-Leder_mrபயங்கரவாதத்திற்கு துணைச் சென்று, அவர்களுக்கு நிதி உதவிகளை வழங்கி, கடந்த ஆட்சியாளர்கள் தூக்கு மேடைக்கு செல்லும் அளவிற்கு குற்றம் இழைத்துள்ளனர் என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த சரத் பொன்சேகா, கடந்த 2005ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது விடுதலை புலிகளுக்கு இலஞ்சம் வழங்கியே மஹிந்த ஜனாதிபதியானர்.

தமிழ் மக்கள் வாக்களிப்பதை தடுக்கும் வகையில் மஹிந்த அரசாங்கம் 2 பில்லியன் டொலரை விடுதலை புலிகள் இயக்கத் தலைவருக்கு வழங்கியிருந்தது.

இந்த தொகையானது அவர்களுக்கு மலேசியாவிலிருந்து போர்க்கப்பல்களை கொள்வனவு செய்யும் வகையில் வழங்கப்பட்டிருந்தது. அத்துடன் இப்பணத்தை மஹிந்த ஆட்சியில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ஷவே நேரில் சென்று கையளித்திருந்ததாக அவர் என்னிடம் குறிப்பிட்டார்.

அதன்போது மலையக அமைச்சர் ஒருவரும் அங்கிருந்த நிலையில், மலையக மக்களையும் வாக்களிக்க இடமளிக்க வேண்டாம் என பிரபாகரன் எச்சரித்ததாகவும் தெரிவித்தார்.

இவ்வாறு தமது சுயநலத்திற்காக பயங்கரவாதத்திற்கு துணைச்சென்றவர்கள் என்ற ரீதியில் சட்டப்படி அவர்கள் தூக்கு மேடைக்கு செல்லும் அளவிற்கு துரோகம் இழைத்துள்ளனர். இவை அனைத்தையும் கூற நான் ஒருபோதும் தயங்க மாட்டேன். அதேவேளை இது தொடர்பில் தொடர்ந்து கவனம் செலுத்தப்படுவதுடன் விசாரணைகளும் முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டார்.

Previous articleகடந்த வருடம் மாயமான ஆசிரியையும் மாணவனும் கைது.
Next articleலண்டனில் தமிழ் பெண்ணை அடித்து தூக்கி எறிந்த பஸ்!