மைத்திரி, ரணில் ஆட்சியில் நீதிக்கு ஆபத்து! பதறுகிறார் மஹிந்தர்

mahinda-ranil-maithriநல்லாட்சி என்று கூறும் மைத்திரி, ரணில் ஆட்சியல் நாட்டின் நீதித்துறைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும், குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமான முறையில் யானைக் குட்டியொன்றை பராமரித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த உடுவே தம்மாலோக்க தேரரர் இன்று பிணையில் விடுதலைச் செய்யப்பட்டார்.

தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (வியாழக்கிழமை) அவரை நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், பௌத்த மதத்தின் ஐந்து பிரதான கொள்கைகளும் சீர்குலைக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

இந்த அரசாங்கம் ஆட்சிபீடமேறும் போது நீதியை நிலைநாட்டுவோம், மக்களுக்கு சாதாரண நீதியைப் பெற்றுக் கொடுப்போம் என்று வாக்குறுதி வழங்கியதாகவும், அவ்வாறு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் மஹிந்த கேட்டுக் கொண்டார்.

Previous articleகாணாமல் போன சகுந்தலா…. தெரிகிறதா இவரை?
Next articleகர்ப்பிணி பெண்களும், குங்குமப்பூவும்