யாழில் மாணவர்களிடம் கப்பம் கோரி தாக்குதல்

jaயாழில் உள்ள பிரபல பாடசாலையில் உயர்தரத்தில் கற்கும் மாணவர் குழு ஒன்று சாதாரண தரத்தில் கற்கும் மாணவர்களிடம் கப்பம் கோரி தாக்குதல் மேற்கொண்டதில் மாணவர் ஒருவன் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கடந்த புதன் கிழமை நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

அன்றைய தினம் பாடசாலையில் நான்காம் பாட வேளை க.பொ.த. சாதாரண தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் வகுப்பறைக்குள் ஆசிரியர் இல்லாத போது புகுந்த உயர் தரத்தில் கற்கும் மாணவர்கள் குழு ஒன்று அங்குள்ள மாணவர்களிடம் கப்பமாக பணம் கோரியுள்ளனர்.

அவர்கள் கோரிய பணத்தினை கொடுக்க மறுத்த இரு மாணவர்கள் மேல் அவர்கள் தாக்குதல் மேற்கொண்டு உள்ளனர். அதனால் டினேஷ் கவிபிரியன் எனும் மாணவன் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த மாணவன் தற்போது யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அதேவேளை அன்றைய தினம் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட பாடசாலை அதிபர் தாக்குதல் மேற்கொண்ட மாணவர் குழுவில் ஒரு மாணவனை பாடசாலையில் இருந்து தற்காலிகமாக இடை நிறுத்தி இருந்தார்.

அதனை அடுத்து அன்றைய தினம் மாலை அதிபரின் வாசஸ்தலத்துக்குள் புகுந்த கும்பல் ஒன்று அதிபரின் காரின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி உள்ளனர்.

குறித்த மாணவ கும்பல் பாடசாலையில் பல தடவைகள் மாணவர்ககளிடம் பணம் கோரி தாக்குதல்களை மேற்கொண்டு உள்ளதாகவும் அது தொடர்பில் கண்டிக்க முயன்ற ஆசிரியர்களை ‘தமக்கு சட்ட விரோத கும்பல்களுடன் தொடர்பு இருக்கின்றது பின்விளைவை சந்திக்க நேரிடும் ‘ என மிரட்டி வந்தனர் எனவும் தெரிவிக்க படுகின்றது.

Previous articleகிழக்குப் பல்கலைக்கழகத்தினுள் 50க்கும் மேற்பட்ட சிங்கள மாணவர்கள் தாக்குதல்: 9 பேர் வைத்தியசாலையில்
Next articleஅமெரிக்காவை மிரட்டும் வடகொரியா ஏவுகணை வீச்சு