பசில் ராஜபக்சவின் கட்சி உறுப்புரிமை ரத்து!

Basil-Rajapaksa1முன்னாள் பொருளாதார அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்சவின் கட்சி உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் பிரிவு தேசிய அமைப்பாளர் ரவி கிருஸாந்த கொழும்பு ஊடகமொன்றிடம் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

2005ம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து இலங்கை வந்த பசில் ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆதரவினால் கட்சியின் தேசிய அமைப்பாளராகவும், அமைச்சராகவும் கடமையாற்றியிருந்தார்.

எனினும், பசில் ராஜபக்ச எந்த சந்தர்ப்பத்திலும் 10 ரூபா பணத்தைச் செலுத்தி சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்ளவில்லை.

இதனால் பசில் ராஜபக்ச தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினரல்ல.

சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் வருடாந்தம் தமது அங்கத்துவத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். எனினும் பசில் ராஜபக்ச அவ்வாறு கட்சி உறுப்புரிமையை புதுப்பித்துக் கொள்ளவில்லை.

இவ்வாறான நபர் ஒருவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவடையச் செய்து புதிய கட்சி அமைப்பது குறித்து பேசுவது ஆச்சரியப்படக்கூடிய வியடமன்று என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous articleதன்னை காப்பாற்றியவரை 5 ஆயிரம் மைல் பயணித்து பார்க்க வரும் பென்குயின்! (வீடியோ)
Next articleஅவசர நிலையை பிரகடனப்படுத்திய கனேடிய நகரம்: காரணம் என்ன?