உலக வேகப்பந்து வீச்சாளர்களில் லசித் மலிங்கவின் பெயர் நிலைத்து நிற்கும் வகையில் கடந்த பல வருடங்களாக பல முக்கிய தருணங்களில் உலகின் கவனத்தை ஈர்த்த இலங்கையின் நட்சத்திர வேகப் பந்து வீச்சாளர் லசித் மலிங்கவின் பந்து வீச்சு வடிவத்தைப் பின்பற்றும் ஒமானின் முனிஸ் அன்சாரியும் தற்போது உலகின் கவனத்தைப் பெற்று வருகிறார்.
லசித் மலிங்கவின் பந்து வீச்சு வடிவத்தைப் பின்பற்றும் அவர், சில வாரங்களுக்கு முன்பாக மலிங்கவிடம் அறிவுரைகளையும் நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டுள்ளார். இந்நிலையில்தற்போது முனிஸ் அன்சாரியின் பந்து வீச்சும் கவனிக்கப்பட ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.