மீட்கப்பட்ட இரண்டு வயது சிறுமி வைத்திய சாலையில் அனுமதி

abuseகாத்தான்குடி பிரதேசத்தில் நேற்றைய நாள் (வெள்ளிக்கிழமை) காணாமல் போயிருந்த இரண்டு வயது சிறுமி, நான்கு கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள பாலமுனை பகுதியில் வைத்து பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார்.

புதிய காத்தான்குடி அல் அமீன் வீதியைச் சேர்ந்த குறித்த சிறுமி பிற்பகல் ஒரு மணியளவில் காணாமல் போயுள்ளதைத் தொடர்ந்து பெற்றோரும், உறவினர்களும் சிறுமியை தேடி அலைந்துள்ளனர்.

அதன்போது பாலமுனை பிரசேத்திலுள்ள ஒரு வீதியில் சிறுமியொருவர் அழுது கொண்டு நிற்பதை கண்ட பொதுமக்கள் காத்தான்குடி பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதனை தொடர்ந்து பாலமுனை பகுதிக்கு விரைந்த காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ரி.ஜெயசீலன் தலைமையிலான குழுவினர் குழந்தையை மீட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து குறித்த சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளாரா என்பது குறித்து கண்டறியும் வகையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleபிரபாகரன் உயிருடன் இருந்தாரா கொல்லப்பட்டாரா? கண்டறிய வேண்டும் என்கிறார் சமரசிங்க
Next articleசிகிரியாவில் கூகுள் பலூன் பரி­சோ­தனை