இணையத்தள சேவையை துரிதப்படுத்துவதற்கான கூகுள் பலூன் பரிசோதனை எதிர்வரும் 30 ஆம் திகதி சிகிரியாவில் நடத்தப்படவுள்ளதாக தொழில் நுட்ப மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கூகுள் நிறுவனத்தினால் அண்மையில் பலூன் பரிசோதனை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இதன்படி அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இதன்பிரகாரம் இது குறித்து இளைஞர்களின் மன்ற பிரதிநிதிகளுக்கும் ஊடகங்களுக்கும் தெளிப்படுத்தும் வகையில் பலன் பரிசோதனை எதிர்வரும் 30 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்போது இளைஞர்கள் மற்றும் ஊடகங்களுக்கு குறித்த பலூன் பரிசோதனை தொடர்பில் தெளிவூட்டப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.