பாரிய கடன் சுமை! அரச நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய திட்டம்

Captureசர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை கேட்டுள்ள கடனுதவியை பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கம் புதிய வரி விதிப்புகளையும் சில அரச நிறுவனங்களை மறுசீரமைக்க, அவற்றின் பங்குகளை விற்பனை செய்ய திட்டமிடுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் நடவடிக்கைக்கு அமைச்சரவையின் அனுமதி ஏற்கனவே கிடைத்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம், ஸ்ரீலங்கன் விமான சேவை, லிட்ரோ கேஸ் நிறுவனம், கப்பல்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் நிறுவனம், விமானங்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்யும் நிறுவனம், சலுசல, லக்சல, நுரைச்சோலை, கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையங்கள், மக்கள் தோட்ட நிறுவனம் (ஜனவசம), எல்கடுவ பெருந்தோட்ட கூட்டுத்தாபனம் போன்ற பல நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட உள்ளதுடன் அவற்றின் பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன.

அரசுக்கு சுமையாக காணப்படும் மற்றும் பெரும் கடனில் நடத்தப்பட்டு வரும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Previous articleசூடு பிடிக்கும் வெள்ளைக் கொடி பொன்சேகா என்னைச் சிக்கவைக்க முனைகிறார் – கோத்தா
Next articleபுதிய பரபரப்பில் இராணுவம்…? குருவி என இரகசிய பெயரில் பொட்டு அம்மான் உயிருடன்?