யாழில் டாக்டர் அப்துல் கலாமின் உருவச் சிலை

kalamயாழ். பொதுநூலகத்தில் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் உருவச் சிலையினை நிறுவ திட்டமிட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய துணைத்தூதுவர் ஆ. நடராஜா தெரிவித்தார்.

யாழ். கீறின் கிறாஸ் விருந்தினர் விடுதியில் ஊடகவியலாளர்களுக்கான விருந்துபசார நிகழ்வு இன்று சனிக்கிழமை நடைபெற்ற போதே அவர்; இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் பேசிய அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இந்திய அரசாங்கம் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் அவரின் நினைவாக பாதி உருவச்சிலையினை நிறுவவுள்ளதாக தெரிவித்தார்.

இந்தியாவில் தற்போது செய்துகொண்டிருக்கும் சிலை மிக விரைவில் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வந்து யாழ்.பொது நூலகத்தில் உள்ள இந்திய கோர்னரில் நிறுவவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

Previous articleரூ 1 லட்சத்தை அள்ளிக்கொடுத்த கருணாகரன்- எந்த முன்னணி நடிகரும் உதவவில்லை
Next articleசெல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் சித்தர் அற்புதம்!