புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் துபாயில் முதலீடு…?

gold2விடுதலைப் புலிகளிடமிருந்து இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டு, பின்னர் காணாமல் போனதாக கூறப்படும் தங்கத்தை தேடி பாரிய நிதி மோசடி குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழு இவ்வாரம் துபாய் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சுமார் 100 கிலோ தங்கம் துபாயில் முதலீடு செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த முதலீட்டை செய்தவர்கள் தொடர்பில் ஆராய இக் குழுவினர் செல்லவுள்ளனர்.

யுத்த காலத்தில் புலிகளால் நிர்வகிக்கப்பட்ட வங்கிகளில் வடக்கு மக்களில் பெருமளவான தங்கம் அடகு வைக்கப்பட்டிருந்தன.

இவற்றில் பெருமளவானவை இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

புலிகளிடமிருந்து சுமார் 150 கிலோகிராம் தங்கம் கைப்பற்றப்பட்டதாக அண்மையில் பிரதமர் ரணில் நாடாளுமன்றில் தெரிவித்ததோடு, அவற்றில் 30 கிலோகிராம் தங்கம் மீள கையளிக்கப்பட்டதாகவும், 80 கிலோகிராம் இராணுவத்தினரிடம் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

எஞ்சிய தங்கம் தொடர்பில் ஆராய்ந்து விரைவில் நாடாளுமன்றில் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

எவ்வாறெனினும், புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தின் ஒரு பகுதி கடந்த ஆட்சிக்காலத்தில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், கைப்பற்றப்பட்ட தங்கத்தின் உண்மையான பெறுமதி குறித்து இதுவரை சரியான தகவல்கள் அறிவிக்கப்படவில்லை.

Previous articleவலி. வடக்கு மக்கள் மற்றவர்களுடைய காணிகளை கேட்கவில்லை மைத்திரி
Next article12 இலக்கங்களுடன் புதிய தேசிய அடையாள அட்டை அறிமுகம்