கரப்பந்தாட்டம் விளையாடியவர் மரணம்

bolதிருநெல்வேலி, பாற்பண்ணைப் பகுதியில் கரப்பந்தாட்டம் விளையாடிக் கொண்டிருந்தவர் திடீரென மரணமடைந்த சம்பவமொன்று, சனிக்கிழமை (12) இரவு இடம்பெற்றுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

திருநெல்வேலி, பாற்பண்ணைப் பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் பிரகாஸ் (வயது 30) என்ற ஒரு குழந்தையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கரப்பந்தாட்டம் விளையாடிக் கொண்டிருந்த குறித்த நபருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, வாயிலிருந்து இரத்தம் வடிந்துள்ளது.

இதையடுத்து, சக விளையாட்டு வீரர்களால் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous article‘கோபத்தை விட்டுவிடு’- மனைவிக்கு சாய் பிரசாந்த் எழுதிய உருக்கமான கடிதம்!
Next articleமீண்டும் இருட்டில் இலங்கை