15 நாட்கள் சமாதி நிலையில் இருந்து உடல் நலத்துடன் திரும்பிய சாமியார்

Godman-comes-out-hale-and-hearty-from-15-days-Samadhi-in_SECVPFபீகார் மாநிலம் மாதேபுரா மாவட்டம் பத்காமா கிராமத்தில் உள்ளது பிரமோத் பாபா சாமியார் ஆசிரமம்.

பிரமோத் பாபா சாமியார் கடந்த் 28 ந்தேதி அவரது ஆசிரமத்தில் 10 அடி ஆழம் 10 அடி அகல குழி தோண்டி அதில் சமாதி இருக்க போவதாக கூறினார். அதன் படி சாமியார் சமாதி அந்த் குழிக்குள் இறங்கினார் அவரது சீடர்கள் குழியை துணி கொண்டு கொண்டு மூடினர் பின்னர் மணலை கொண்டும் மூடினர்.

ஆனால் மாவட்ட நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் யாரும் அவரது சமாதி நிலையை காண வரவில்லை.சிறிது நேரம் கழித்து தகவல் கிடைத்து உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவ குழுவும் விரைந்து வந்தது ஆனால் சீடர்கள் குருவின் சமாதி நிலையை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என தடுத்து விட்டனர்.

சாமியார் இன்று சமாதி நிலையில் இருந்து வெளியே வந்தார்.அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் நலமாக இருப்பதாக கூறியாதகா மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு தெரிவித்து உள்ளார்.

Previous articleபெர்முடா முக்கோணத்தின் மர்மம் விலகியது!
Next articleஜெனீவாவில் உணர்வுபூர்வமாக நடைபெற்றுவரும் நீதிக்கான ஐ.நா நோக்கிய பேரணி